“நேபாளத்தில் தொடரும் பேரழிவு…” 160-க்கும் மேற்பட்டோர் பலி, 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயம் என தகவல்… அரசின் தீவிர நடவடிக்கை…!!

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு திடீர் வெள்ளப்பெருக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 80 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். இதில் இதுவரை 4 முதல் 5 பேருடன் மட்டுமே தொடர்பை ஏற்படுத்த முடிந்துள்ளதாக மகாராஷ்டிரா பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் விவரங்களைச் சேகரிக்கவும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மகாராஷ்டிரா அரசு ‘மந்திராலயா’ தலைமைச் செயலகத்தில் 24 மணி நேர உதவி மையத்தை அமைத்துள்ளது. மீட்பு பணிகளுக்காகக் கட்டணமில்லா உதவி எண்களான 1070 மற்றும் +91-9321587143 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயிரிழப்புகளுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், 37.5 டன் எடையுள்ள இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் உணவுப் பொட்டலங்களை இந்திய ராணுவ விமானங்கள் மூலம் நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தற்போது வரை நேபாள வெள்ளத்தில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிரத் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

38 minutes ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

46 minutes ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

52 minutes ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

53 minutes ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

1 மணத்தியாலம் ago