எகிறும் பட்ஜெட்…! ராணுவச் செலவில் இந்தியாவுக்கு 5-வது இடம்…! அமெரிக்கா, சீனாவுக்கு டஃப் கொடுக்கும் பாரதம்…!!

By Devi Ramu on சித்திரை 30, 2026

Spread the love

உலக அளவில் ராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் புதிய பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா சுமார் 8.70 லட்சம் கோடி ரூபாய் செலவுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்தியாவின் ராணுவச் செலவு தற்போது 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது; குறிப்பாகப் அண்டை நாடுகளுடனான எல்லைப் பாதுகாப்பு மற்றும் அவசரகால ஆயுதக் கொள்முதல் போன்ற காரணங்களால் இந்தச் செலவு உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராணுவச் செலவினங்களில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்க, அதனைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. மொத்த உலக ராணுவச் செலவில் இந்தியாவின் பங்கு மட்டும் 3.2 சதவீதமாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பைக் பலப்படுத்தும் நோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.