நாடு முழுவதும் இனி 24 மணி நேரத்தில் தபால் சேவை… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

நாடு முழுவதும் தபால் துறை மூலமாக மக்கள் எளிதில் சேவைகளை பெற்று வருகின்றனர். இதனிடையே மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஒரு புதிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது நாடு முழுவதும் தபால் துறை மூலம் 24 மணி நேரத்தில் தபால் சேவையும் 48 மணி நேரத்தில் பார்சல் சேவையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேட்டியளித்த அவர், 2026 ஜனவரி 1ஆம் தேதி இந்த சேவைகள் அமலுக்கு வர உள்ளதாக குறிப்பிட்டார். 2029 ஆம் ஆண்டுக்குள் தபால் துறையை லாபம் தரும் துறையாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.