தவெகவில் இணைந்தார்.. CM விஜய்யின் புதிய ஆட்டம்… காலையிலேயே தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் நேரடியாகப் போட்டியிடாத நிலையிலும், சென்னை மாநகராட்சியில் தனக்கான முதல் கணக்கைத் தொடங்கியுள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மணலி வார்டில் சுயேட்சை வேட்பாளராகக் களம் கண்டு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த கவுன்சிலர் ராஜன், தற்போது அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்துள்ளார்.

இதன் மூலம், மொத்தம் 200 கவுன்சிலர்களைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் தவெகவின் ஒரேயொரு பிரதிநிதியாக ராஜன் உருவெடுத்துள்ளார். மாநகராட்சியில் 150-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களுடன் அசுர பலத்துடன் விளங்கும் ஆளுங்கட்சியான திமுகவிற்கு மத்தியில், தனி ஒருவனாக நின்று தவெகவின் கொள்கைகளையும் மக்கள் குரலையும் ராஜன் எவ்வாறு ஒலிக்கச் செய்யப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு தற்போதே அரசியல் வட்டாரத்தில் பரவத் தொடங்கியுள்ளது.