“எம்.எல்.ஏ பதவி ராஜினாமா.. திமுக கூட்டணியில் இருந்து விலகல்”… ஜவாஹிருல்லா எடுத்த திடீர் முடிவு… ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த ஷாக்…!

Spread the love

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி (மமக), கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார். இந்நிலையில், வரும் தேர்தல்களில் மமக தனிச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, திமுகவினர் மத்தியில் அதிருப்தியையும் உருவாக்கியது. நாகையில் ஜவாஹிருல்லா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனிச் சின்னத்தில் களம் காண வேண்டும் என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புவதன் பின்னணியில் உள்ள அசல் காரணத்தை மமக தலைவர் ஜவாஹிருல்லா விரிவாக விளக்கியுள்ளார். ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று மறுத்துள்ள அவர், திமுகவுக்கும் மமகவுக்கும் இடையிலான உறவு என்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அது கொள்கை ரீதியான ஆழமான உறவு என்று தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் மமகவிற்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், நாட்டின் சூழலையும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தவும் மமக தொண்டர்கள் திமுகவின் வெற்றிக்காக முழு மூச்சோடு உழைத்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிச் சின்னம் தொடர்பான தீர்மானத்தின் உண்மையான பின்னணி குறித்துப் பேசிய அவர், தொடர்ந்து சொந்தச் சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் பதிவையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்து வருவதைக் குறிப்பிட்டார். அந்த வகையில் மமகவின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்திடம் கட்சியின் பதிவை மீட்டெடுத்து, சட்டப்பூர்வமாகத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரிலேயே, வரும் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற 5-வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

புதிதாக அமைந்துள்ள ஆட்சியில் அமைச்சர் பதவி பெறுவதற்காகவே மமக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படும் விமர்சனங்களை முற்றிலும் மறுத்துள்ள ஜவாஹிருல்லா, குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, வக்பு வாரிய சட்டத் திருத்த எதிர்ப்பு, மாநில உரிமைப் பாதுகாப்பு எனப் பல முக்கிய விவகாரங்களில் திமுகவும் மமகவும் எப்போதும் ஒருமித்த உணர்வோடு இணைந்து களம் கண்டுள்ளதை நினைவுகூர்ந்துள்ளார். எனவே, தவறான புரிதலால் எழும் தேவையற்ற விமர்சனங்களைத் இரு தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் நலனைக் காக்க திமுகவுடன் தொடர்ந்து இணைந்து பயணிப்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

7 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

30 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

9 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago