IND W vs AUS W 2வது அரையிறுதி: இந்த நாள்.. இதே நொடிக்காக.. காத்திருந்து சாதித்த இளம் வீராங்கனை ஜெமிமா…!!

By Soundarya on ஐப்பசி 31, 2025

Spread the love

2017 மகளிர் உலகக் கோப்பை போட்டியின்போது, வீராங்கனைகளைக் காண, இளம்பெண் ஒருவர் ஏர்போர்ட் வாசலில் காத்து கொண்டிருந்தார். அந்த பெண் தான், இன்று அதே உலகக் கோப்பையில் இந்திய அணியை ஃபைனலுக்கு அழைத்து சென்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல 25 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸ் தான். 201மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ஜெமிமா.

ஆஸ்திரேலியாவின் எட்டு ஆண்டுகால ஆதிக்கத்திற்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனி ஒருவராக முற்றுப்புள்ளி வைத்தார். இந்த இன்னிங்ஸில் ரோட்ரிக்ஸ் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் ஆனார்.