“இறங்கி இறங்கி அடிக்காதீங்க”…. மைதானத்திலேயே பண்ட் கொடுத்த மாஸ் வார்னிங்…. அப்புறம் நடந்த தரமான சம்பவம்… இலங்கை வீரர் ஏமாந்து போன அந்த நொடி…. வைரல் வீடியோ….!

Spread the love

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் மோதி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், இந்த இரண்டாவது டெஸ்டிலும் வலுவான நிலையில் உள்ளது. இதில், இலங்கைக்கு எதிராக இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் காட்டி வரும் அபார பந்துவீச்சு, அவர் இந்திய சுழற்பந்து வீச்சின் எதிர்கால சூப்பர் ஸ்டார் என்பதை பறைசாற்றுகிறது.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 503 ரன்கள் குவிக்க, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி ‘ஃபாலோ-ஆன்’ ஆனது. தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது சூர்யபண்டாரா நிதானமாக ஆடி அணியை மீட்கப் போராடினார். சுதர் வீசிய ஓவரில் இறங்கி வந்து ஸ்ட்ரோக்ஸ் ஆடிய அவர், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மானவ் சுதரின் சமயோஜிதமான ஒயிட்-சைட் பந்தில் ஏமாந்து ரிஷப் பண்ட்டால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு 92 ரன்களில் வெளியேறினார்.

24 வயதான இளம் வீரர் மானவ் சுதர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இதுவரை 3 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். களத்தில் அவர் காட்டும் துல்லியமும், பேட்டர்களின் எண்ணத்தை கணித்து பந்துவீசும் திறனும் ரவீந்திர ஜடேஜாவிற்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பக்கூடிய சரியான வீரர் அவர்தான் என்பதை நிரூபிப்பதாக முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கணித்துள்ளனர்.

தற்போது இலங்கை அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட வெறும் 16 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கையிருப்பில் சில விக்கெட்டுகளே உள்ளதால், இலங்கை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. இதனால், இந்த இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை முழுமையாகக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: உலகத் தரம் வாய்ந்த ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ உருவாக்கப்படும்… வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தலைநகர் சென்னையில் உலகத் தரம்…

7 minutes ago

BREAKING: ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம்… சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மெகா அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும்…

14 minutes ago

“வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல…” பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பெண் பேராசிரியர்… ஐஐடி மும்பையில் அரங்கேறிய அசத்தல் நிகழ்வு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…

26 minutes ago

“சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரியை விட்டு வெளியே வாங்க…” அமைச்சரின் கலகல பேச்சு… சட்டப்பேரவையில் எழுந்த அதிரடி சிரிப்பலை…!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…

34 minutes ago

“அன்பாக வளர்த்த செல்ல கழுதையை சுட்டுக்கொன்ற கொடூரம்…” அமெரிக்காவில் போலீசார் செய்த காரியம்.. நிதி திரட்டும் தளத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் குவிந்த உதவி… அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…

44 minutes ago