இதெல்லாம் அநியாயம்… பணம் இருந்த என்ன வேணாலும் பண்ணலாமா?… “ரூ.50 கூலி கேட்டது தப்பா?” முதலாளியின் கொடூர முகம்… துப்பாக்கி சுட்டால்… துடிதுடிக்கும் பிஞ்சு உசுரு… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

By Visaka on ஆடி 26, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலேஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள காஃபி தோட்டத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 24ஆம் தேதி வேலைக்குச் செல்வதற்கு முன்பு, தங்களுக்கு தினக்கூலியாக வழங்கப்பட்டு வந்த ரூ. 350-ஐ ரூ. 400-ஆக உயர்த்தி வழங்குமாறு காஃபி தோட்ட உரிமையாளர் ஜெகதீஷ கவுடாவிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழுக்கூலியையும் உடனடியாக வழங்கக் கோரி தொழிலாளர்கள் உறுதியாக நின்றதால், அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக ஜெகதீஷ கவுடா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிக்குண்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தொழிலாளரின் 4 வயதுக் குழந்தையின் தலையில் பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாகக் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

   

முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, மேல் சிகிச்சைக்காக மங்களூருவிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மூடிகெரே போலீசார், தலைமறைவாகியுள்ள காஃபி தோட்ட உரிமையாளர் ஜெகதீஷ கவுடாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கூலி கேட்ட தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.