“உன்னை விலைக்கு வாங்கியிருக்கிறேன்”…. “ஐரோப்பாவில் ரூ.1.5 லட்சம் சம்பளம்”…. இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி போர்ச்சுகலில் நரக வேதனை அனுபவித்த பெண்…. பகீர் வாக்குமூலம்….!

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

வேலை தேடி அலையும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு இயங்கும் மோசடி கும்பல்களின் பிடியில் சிக்கி, வெளிநாட்டில் பாலியல் கொடுமைக்கு ஆளான நாக்பூர் பெண்ணின் நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராமில் ‘வி மைக்ரேட்’ என்ற ஏஜென்சியின் விளம்பரத்தைப் பார்த்து, புனேவில் உள்ள அவர்களின் அலுவலகத்தை அணுகியுள்ளார். ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்டில் காசாளர் பணி, மாதம் ₹1.5 லட்சம் சம்பளம், வாரத்திற்கு 2 நாள் விடுமுறை என ஆசை வார்த்தைகளைக் கூறிய அந்த ஏஜென்சி, கட்டணமாக ரூ.11 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு போலியான வாக்குறுதிகளுடன் அப்பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளது.

கடந்த மே மாதம் மும்பையில் இருந்து அபுதாபி மற்றும் மேட்ரிட் வழியாக போர்ச்சுகல் சென்றடைந்த அந்தப் பெண்ணை, அங்கிருந்த நபர்கள் ஒரு அறையில் அடைத்து வைத்து பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னரே தான் ஏமாற்றப்பட்டதையும், பீர் கடை உரிமையாளரிடம் பணத்திற்கு விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட உள்ளதையும் அவர் உணர்ந்துள்ளார். அங்கே ஏற்கனவே தங்கியிருந்த இந்தியப் பெண்களும் இதேபோல் ஏமாற்றப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்ட அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். அக்கும்பலின் சட்டவிரோத கோரிக்கைக்கு உடன்பட மறுத்த அப்பெண், மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பித்து இந்தியா திரும்பியுள்ளார்.

   

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், புனேயைச் சேர்ந்த பிரதிமா பாட்டியா, அமித் குமார் ஜா, அசார் ஷேக், கபில் மிஸ்ரா மற்றும் போர்ச்சுகலில் உள்ள வம்சி, சைதன்யா, ஹிம்மத் சிங் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பிச் செல்லும் முன், ஏஜென்சியின் நம்பகத்தன்மையை அரசின் அங்கீகாரத்துடன் சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.