தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கிராமப்புற பள்ளிகளில் மூணு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் MBC, சீர் மரபினர் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக மாணவிகளின் வங்கி கணக்கு மற்றும் ஆதார உள்ளிட்ட விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. சுமார் 1.20 லட்சம் மாணவிகளின் விவரங்கள் முழுமையாக பதிவாகவில்லை எனவும் அதனை செப்டம்பர் 10 நாளைக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
