முதலமைச்சர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்..? அதிகாரப்பூர்வ வளையத்திற்குள் அரசு சாரா நபர் நுழைந்தது எப்படி..? இன்பத்துரை எம்பி காட்டம்…!!

By Soundarya on ஆனி 3, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய் அரசுப் பாதுகாப்புப் படைகளைத் தவிர்த்து, தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது குறித்து இன்பரை எம்.பி தமிழ்நாடு அரசுக்கு 5 முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார். ‘கோர் செல்’ (Core Cell) உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வப் பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டும், முதலமைச்சர் ஏன் தனிப்பட்ட பாதுகாவலரைத் தன் நிழலாகக் கூட்டிச் செல்கிறார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலக் காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதலமைச்சருக்கே முழு நம்பிக்கை இல்லையா என்ற கடுமையான விவாதத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், எந்த விதிமுறையின் அடிப்படையில் இந்த அதிகாரப்பூர்வப் பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார் என்றும் அவர் கேட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த அடுக்கடுக்கான கேள்விகளுக்குத் தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்குமா என்றும் இன்பரை எம்.பி வலியுறுத்தியுள்ளார்.