BREAKING: தமிழக பெண்களுக்கு காலையிலேயே குட் நியூஸ்… CM விஜய் வெளியிட்ட அந்த அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

தமிழ்நாட்டில் காவல்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யின் தொடக்க விழா, இன்று மாலை 5 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த மே 27 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்து, கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இன்று உறுதியாக நடைபெற உள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு, இந்த புதிய அதிரடிப்படை திட்டத்தைத் தொடங்கி வைப்பதுடன் காவல்துறையினரிடையே சிறப்புரையும் ஆற்ற உள்ளார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் காவல் துறையில் அவர்களின் பங்களிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழாவைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது.