திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை தபோவனம் கட்டுப்பாட்டில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில் 55 வயதுடைய ஒருவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். அதே பள்ளியில் வேலை பார்க்கும் 34 வயதுடைய கணித ஆசிரியையுடன் தலைமை ஆசிரியருக்கு தகாத உறவு இருப்பதாக தெரிகிறது. அந்த ஆசிரியையின் கணவர் பெல் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார்.
கடந்த 17-ஆம் தேதி கணவர் இல்லாத நேரத்தில் கணித ஆசிரியை தலைமை ஆசிரியரை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த சமயம் திடீரென வீட்டிற்கு வந்த கணவர் மனைவி வேறு ஒருவருடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் இருவரையும் அறைக்குள் வைத்து பூட்டு போட்டு சக ஊழியர்களிடம் விஷயத்தை கூறினார்.
அங்கு வந்த சக ஊழியர்கள் தலைமை ஆசிரியரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது குறித்த பெல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் கட்டாய விருப்ப ஓய்வில் செல்வதாக பள்ளி நிர்வாகம் சார்பில் எழுதி வாங்கப்பட்டு அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். பெல் ஊழியர்களுக்கான குடியிருப்பில் வசித்து வந்த அந்த தலைமை ஆசிரியரை வீட்டை காலி செய்யுமாறு நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அவர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றார்.
