Connect with us

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் துரத்தப்படும் வேஸ்ட் பீஸ்.. ஓட்டிங்கில் 42% பிடித்து கெத்து காட்டிய மாஸ்டர் பீஸ்.. தீயாய் பரவும் தகவல்…

CINEMA

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் துரத்தப்படும் வேஸ்ட் பீஸ்.. ஓட்டிங்கில் 42% பிடித்து கெத்து காட்டிய மாஸ்டர் பீஸ்.. தீயாய் பரவும் தகவல்…

 

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது ஒவ்வொரு நாளும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. ஒருவழியாக இறுதிக்கட்டத்தையும் நெருங்கி விட்டது. இந்நிகழ்ச்சியில் இறுதியாக கூல் சுரேஷ் மற்றும் அனன்யா  இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

#image_title

   

இதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனுக்கு விசித்திரா, ரவீனா ,சரவணா விக்ரம் என மூன்று போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் விசித்ரா கண்டிப்பாக காப்பாற்றப்படுவார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவு இருந்து வருகிறது.

#image_title

அவரை ராஜமாதா என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிக் பாஸ் டைட்டில் அவருக்கு கிடைத்தாலும் ஆச்சரியதுக்கில்லை.  இந்நிலையில் விசித்ராவிற்கு 42 சதவீத வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக உள்ள ரவீனா மற்றும் சரவண விக்ரம் இருவரில் ரவீனா அதிக வாக்குக்களை பெற்றுள்ளார்.

#image_title

ரவீனாவிற்கு 68,909 வாக்குகளும், விக்ரமுக்கு 45, 532 வாக்குகளும் கிடைத்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது ரவீனா இந்த வாரம் வெளியே போவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் பிக் பாஸ் ஆரம்பித்த நாளிலிருந்தே டைட்டில் வின்னர் என்ற கனவோடு சுத்திக் கொண்டிருந்த  சரவண விக்ரம் தான் இந்த வாரம் வெளியேற போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்பதை.

Continue Reading
To Top