பொதுவாகவே எலுமிச்சை பழச்சாறைப் பிழிந்து விட்டுத் தோலை தூக்கிப் போட்டு விடுவோம். இல்லையென்றால் வீட்டிலுள்ள சாமி விளக்கு இது போன்ற பொருள்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்துவோம். நாம் தினம் உண்ணும் உணவிலே சேர்க்கும் உப்பிலேயே நிறையவகை உள்ளது. இப்போது எலுமிச்சை பழத்தின் தோலை வைத்து எப்படி லெமன் சால்ட் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தேன் 10 நிமிடத்தில் லெமன் சால்ட் செய்துவிடலாம்.
லெமன் சால்ட் செய்வதற்கான தேவையான பொருட்கள்: எலுமிச்சை தோல் ஒரு கப், கல் உப்பு அரை கிலோ, கண்ணாடி பாட்டில் ஒன்று. எலுமிச்சை சாற்றை எடுத்த பிறகு தோலை சேகரித்து வைத்து வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள். உலர்த்திய எலுமிச்சை தோலை ஒரு மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த தூளை நியூஸ் பேப்பரில் போட்டு உலர்த்த வேண்டும். ஏனென்றால் உப்பில் ஈரத்தன்மை இருப்பதனால் இது போன்ற நியூஸ் பேப்பரில் உணர்த்தும்போது அதில் உள்ள ஈரத்தன்மையை உரித்து விடும். ஈரத்தன்மை முழுமையாக போன பின்பு கண்ணாடி ஜாரி சேகரித்து கொள்ளலாம். இவ்வளவுதான், எவ்வளவு சுலபமாக நாம் லெமன் சால்ட் செய்து விட்டோம்.
லெமன் சால்டை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் வைப்பதற்கு உலர்த்திய எலுமிச்சை தோழையும் மற்றும் கல்லுப்பையும் தனித்தனியாக மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை அரைத்து லெமன் சால்ட் ஆக பயன்படுத்தலாம், இது நீண்ட நாட்களுக்கு லெமன் சால்டை கெட்டுப் போகாமல் வைத்திருக்க உதவும்.
லெமன் சால்டின் பயன்கள்: உணவில் நாம் எப்போதும் உபயோகிக்கும் உப்பை விட லெமன் சால்ட் சேர்த்து சமைத்தால் சுவையை கூட்டிக் கொடுக்கும். நாம் குடிக்கும் நெல்லிக்காய் போன்ற ஜூஸ்களில் லெமன் சால்ட் கலந்துக் குடித்தால் ஜூஸ் மிகவும் வாசனையாக இருக்கும். வழக்கமான உப்பில் உள்ள சோடியத்தை விட லெமன் சால்டில் சோடியம் குறைவாக இருக்கும். ஊறுகாய் தயாரிக்கும் போது அதில் லெமன் சால்ட் சேர்த்து தயாரித்தால் ஊறுகாய் நீண்டக் காலத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும். சாலட் களில் லெமன் சால்ட் சேர்த்து சாப்பிட்டால் சாலட் மிகவும் சுவையாக இருக்கும். துணி துவைக்கும் போது சிறிதளவு லெமன் சால்ட் சேர்த்து துவைத்தால் துணிகள் மிகவும் வாசனையாக இருக்கும். லெமன் சால்டை கடையில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
