ஆக்ரோஷ வெள்ளம்… உயிர் பிழைப்பதே அதிசயம்… வெள்ளக்காடான ஆற்றில் குதித்து சிறுமியை மீட்ட மூன்று ஹீரோக்களின் அதிரடி சாதனை… குவியும் பாராட்டுக்கள்…!

By Visaka on ஆடி 27, 2026

Spread the love

உமர்காம் தாலுகாவில் உள்ள தெம்பி கிராமத்தில், வாரோலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆக்ரோஷமாகப் பாய்ந்து சென்ற வெள்ளத்தில் சிறுமி தன்ஸ்வி எதிர்பாராதவிதமாகச் சிக்கிக்கொண்டு தவித்தார். உரிய நேரத்தில் முறையான மீட்புக் குழுவினர் வருவதற்குள் நிலைமை கைமீறிப் போகும் சூழல் நிலவியது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்ளூர் இளைஞர்களான கோபால், யோகேஷ் மற்றும் வினோத் மாச்சி ஆகியோர் துணிச்சலுடன் களத்தில் இறங்கி, தங்களது உயிரைப் பணையம் வைத்து போராடி சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டனர்.

https://twitter.com/MandeepRajBhar9/status/2081426423345205519/photo/1

   

தெம்பி மச்சிவாடா பகுதியைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களின் துணிச்சலான செயலால், சிறுமி தன்ஸ்வி எந்தவித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டார். சரியான நேரத்தில் ஆபத்தை உணர்ந்து, உள்ளூர் மக்களே ஒன்று திரண்டு சுதாரித்துக் செயல்பட்டதன் மூலம் ஒரு விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இவர்களின் இந்த தன்னலமற்ற மனிதநேயச் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளதுடன், அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.