தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்ட வழக்கில், சென்னை காவல்துறை நேற்று ‘மேகாலயா பிராஜக்ட்’ (ஆபரேஷன் மேகாலயா) என்ற அதிரடிப் பெயரை வெளியிட்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை வீழ்த்த சதி நடந்திருக்கும் போது, இதற்கு ‘ஆபரேஷன் தமிழ்நாடு’ என்றோ அல்லது ‘ஆபரேஷன் விஜய்’ என்றோ பெயர் வைக்காமல், வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் பெயரை ஏன் சூட்டினார்கள் என்ற குழப்பம் பலரிடமும் எழுந்தது. இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, மேகாலயா மாநிலத்தின் அரசியல் வரலாறே இதற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
மேகாலயாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருந்தது. ஆனால், பெரும்பான்மை இடங்களைப் பெறாத சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, மிகக் குறுகிய காலத்தில் பிற சிறிய கட்சிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி, எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்து ஆட்சியைப் பிடித்தது. இப்படிப்பட்ட அரசியல் சதுரங்க வேட்டையும், திடீர் ஆட்சி மாற்றங்களும் மேகாலயாவில் அரங்கேறியதால், அதே பாணியை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த திட்டமிட்ட சதிகாரர்கள், இந்த சதித் திட்டத்திற்கு ‘ஆபரேஷன் மேகாலயா’ என்று குறியீட்டுப் பெயர் வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் சுமார் 15 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி ஒருவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதால், அவரைப் பிடிக்க சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ள ஐடிபிஎஸ் திருநாவுக்கரசுடன் சதித் திட்டம் தீட்டப்பட்ட நாட்களில் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதால், விரைவில் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த சதியில் தொடர்பிலிருந்த முக்கியப் புள்ளிகள் பலரும் தற்போது கடுமையான பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…
ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…
உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…
யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…
பழைய டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனுடன் இரவு 10 மணிக்கு ஏற்பட்ட ஒரு சிறிய தலைவலி தகராறால்…