#image_title
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், மோகன் என பல முன்னணி பிரபலங்கள் கமிட்டாகியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். GOAT படத்தை AGS நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது அந்த இயக்குனர் ஹெச் வினோத் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க இருந்த டிவிவி நிறுவனத்தின் தானய்யா அந்த படத்தில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதற்கு காரணம் விஜய்யிடம் அந்த படத்துக்கான முறையான ஒப்பந்தங்கள் எதுவுமே போடாமல் தானய்யா அதற்குள்ளாகவே படத்தை வியாபாரம் செய்யும் வேலைகளில் இறங்கிவிட்டாராம். இது விஜய்க்கு பிடிக்காததால் அவரை படத்தில் நீக்கி விட்டார் என்று கூறப்பட்டது. தற்பொழுது யார் அடுத்த தயாரிப்பளார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனால் நம்ம தல அப்படி கிடையாது. விடாமுயற்சி திரைப்படம் தள்ளி போவதால் , அவர் தனது அடுத்த படமான ‘GOOD BAD UGLY ‘ திரைப்படத்தின் வேளைகளில் இறங்கி விட்டாராம். இத்திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் தயாரிக்கிறது. தற்பொழுது இவர்கள் இத்திரைப்படத்தின் ஓவர் சீஸ் ரைட்ஸ்யை பாரெஸ்ட் பிலிம்ஸ்-க்கு 22 கோடிக்கு விற்று விட்டார்களாம். அஜித்துக்கு அட்வான்ஸ் கொடுத்த உடனே, ஓவர் சீஸ் ரைட்ஸ்யை மைத்ரி மூவிஸ் நிறுவனம் விற்று விட்டதை அஜித் கண்டுகொள்ளவே இல்லையாம். எனக்கு சம்பளம் கொடுத்தீங்கன்னா சரி, என்னமோ பண்ணிட்டு போங்க என்பது போல நம்ம தல அமைதியாக இருந்து விட்டாராம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…