Connect with us

படத்தின் பட்ஜெட் 70 கோடி தான்.. ஆனா, சிவகார்த்திகேயன் முருகதாஸ் இவ்ளோவா..? கதிகலங்கும் கோலிவுட் தயாரிப்பாளர்கள்..

CINEMA

படத்தின் பட்ஜெட் 70 கோடி தான்.. ஆனா, சிவகார்த்திகேயன் முருகதாஸ் இவ்ளோவா..? கதிகலங்கும் கோலிவுட் தயாரிப்பாளர்கள்..

 

சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது “அமரன்” என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை “ராஜ்குமார் பெரியசாமி” அவர்கள் இயக்கி இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி போன்ற பல பிரபல நடித்து வருகிறார், இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் ப்ரொடக்ஷன் தயாரித்து “கமல்ஹாசன்” வெளியிடப் போகிறார், இப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைப்பற்றி தற்போது அதிகாரப்பூர்வமாக கூடிய விரைவில் தகவல்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் தெரிவித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் 23 படம் “ஏ.ஆர் முருகதாஸ்” அவர்கள் இயக்கத்தில் தற்போது அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் “அனிருத்” அவர்கள் இசையமைக்கிறார், அதுமட்டுமின்றி இப்படத்திற்கு ஹீரோயினாக பாலிவுட் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்கள். இப்படத்தின் அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வரும்.

   


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் இப்படத்திற்கு பட்ஜெட் டோட்டல் வெளியாகி உள்ளது, இப்படத்தின் மொத்த பட்ஜெட் 70 கோடி, சிவகார்த்திகேயன் அவர்களுக்கு 30 கோடி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு 20 கோடி, அனிருத் அவர்களுக்கு 7 கோடி மற்றும் பல நடிகர்களுக்கு சம்பளம் பிரித்து அளிக்கப்படும். அப்படி இருக்கையில் மொத்த எழுவது கோடியில் 53 கோடி இவர்களுக்கே போய்விட்டது,

படத்தின் பட்ஜெட்டை விட அதில் நடிக்கும் நடிகர்களுக்கு சம்பளம் அதிகமாக உள்ளபோது, இதில் வெறும் 13 கோடியை வைத்து படம் எப்படி இயக்குவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படத்தின் பட்ஜெட்டும் நடிகர்களின் சம்பளமும் வெளியானதிலிருந்து பலரும் இப்படத்தினை கலாய்த்து விமர்சித்து வருகிறார்கள் இதற்கான ஒரே தீர்வு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிக்கையின் மூலம் தான் முற்றுப்புள்ளி ஆகும்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top