‘இந்தியாவில் Mr. Bean ஆ?’… வீடியோ வெளியிட்டு இணையவாசிகளை குழப்பிய பிரபலம்… குவியும் லைக்ஸ்கள்…

By Begam

Updated on:

தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் போன்ற படங்களில் நடித்தவர் சுஜா வருணி. பல திரைப்படங்களில் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார் சுஜா.வாத்தியார் திரைப்படத்தில் இவர் ஆடிய என்னடி முனியம்மா பாடல் இன்றுவரை மிகவும் பிரபலமாக உள்ளது.

   

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் சுஜா வருணி. உள்ளே சென்றதில் இருந்தே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றார் சுஜா.

இவர் பழம்பெரும் நடிகரான சிவாஜியின் பேரனான 2018ல் சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 11 வருடங்களாக காதலித்து திருமணத்தில் இணைந்த சிவாஜி தேவ், சுஜாவருணி தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

தற்பொழுது வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருகின்றனர் இருவரும். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் சிவாஜி தேவ். இவர் தற்பொழுது Mr. Bean கெட்டப்பில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Shiva Kumarr (@shivakumarr20)