திடீர் திருப்பம்… சற்றுமுன் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்… செம குஷியில் துள்ளும் இபிஎஸ்…!

By Visaka on ஆடி 12, 2026

Spread the love

கடலூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது தாய் கட்சிகளில் இருந்து விலகி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) அதிகாரப்பூர்வமாக தங்களை இணைத்துக் கொண்டனர். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.A. பாண்டியன் முன்னெடுத்த இந்த சிறப்பான ஏற்பாட்டின்படி, சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் இந்த இணைவு விழா நடைபெற்றது. கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பாரம்பரியமிக்க இரட்டை இலை துண்டை அணிவித்து, கட்சியின் கொள்கைகளைப் பின்பற்றி உழைக்க வேண்டும் என வாழ்த்தி, இனிதே வரவேற்றார்.

இந்த பிரம்மாண்ட இணைப்பு விழாவில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அதிமுக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர். குறிப்பாக, மாவட்ட கழக இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எல்லேரி பிரபு, ஒன்றிய கழக செயலாளர் ரங்கசாமி, கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஒன்றிய அவை தலைவர் கோவிந்தராஜ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் சௌந்தரராஜன் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூர் கழக செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புதிதாக கட்சியில் இணைந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். கடலூர் மாவட்டத்தில் மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அதிமுகவில் இணைந்துள்ளது, அப்பகுதியில் அக்கட்சியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.