தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் உருவாகும் “சூழல் மன்றங்கள்”… இதனால் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்ன தெரியுமா…?

By admin on மாசி 4, 2025

Spread the love

இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னையில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அது மட்டுமில்லாமல் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றுதான் அனைத்து பள்ளிகளிலும் “சூழல் மன்றங்கள்” என்பதாகும். இது எதற்காக அறிவிக்கப்பட்டது இதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

காலநிலை மாற்றங்கள் இன்றைய உலக நாடுகளுக்கும் மனித இனத்திற்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்து கொண்டிருக்கிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வு பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. காலநிலை மாற்றத்தை குறித்து ஆராய இந்திய மாநிலங்களையே முதன்முதலாக தமிழ்நாட்டில் தான் மாநாடு நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள். இந்த இயக்கத்தின் கீழ் பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்ச்சி இயக்கம் ஆகிய சிறப்பு இயக்கங்கள் மூலம் காலநிலை மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

   

உலக நாடுகள் பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. இந்த பேரிடர்கள் எதனால் ஏற்படுகிறது காலநிலை மாற்றம் என்றால் என்ன அதன் விளைவுகள் என்ன என்பதை பற்றி மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலநிலை மாற்றத்தை கல்வித் துறை மூலமாக புகட்ட தான் நம்முடைய தமிழக அரசு திட்டமிட்டு எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

 

இந்த சூழல் மன்றங்கள் மூலமாக மாணவர்களுக்கு காலநிலை மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனால் பாதிப்படையயும் வேளாண்மை நீர்வளம் ஆகிய துறைகளைப் பற்றி சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த காலநிலை வெப்ப அலை மற்றும் பேரிடர்களை எப்படி எதிர்கொள்வது என்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மாணவர்களுக்கு ஒரு தகவலை சொன்னால் அது நம் சமூகத்தை கண்டிப்பாக மாற்றுவதற்கு ஒரு முன்னெடுப்பாக இருக்கும் என்று தமிழக முதலமைச்சர் இந்த சூழல் மன்றங்களை தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதை அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள்.