BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது… நகை பிரியர்களுக்கு அடிச்சது லக்…!

By Visaka on ஆடி 1, 2026

Spread the love

மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்களின் எதிரொலியாக, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹800 வரை அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹100 குறைந்து ₹13,100 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, புதிய மாதத்தின் முதல் நாளிலேயே இப்படி கணிசமாகக் குறைந்துள்ளதால், நகை வாங்கக் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.