இந்தியாவில் பல பாரம்பரியமான வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. முக்கியமாக அதிக அளவில் கோவில்கள் இருக்கிறது. இந்தியா ஒரு ஆன்மீக பூமி ஆகும். இந்து மதத்தில் பலவிதமான வழிபாடுகள் செய்வார்கள். நிறைய பூஜை புனஸ்காரங்கள் நடத்துவார்கள். ஒருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல் இருக்கும்.
மக்கள் தாங்கள் நினைத்தது நிறைவேற வேண்டும் தாங்கள் விருப்பப்பட்டது நடக்க வேண்டும் என்பதற்காக தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்துவர். பொங்கல் வைப்பது படையல் வைப்பது கிடா செய்வது போன்று பல வகைகளில் தங்களது பக்தியை வெளிப்படுத்துவர். அம்மன் கோவில்கள் என்றாலே பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தான்.
அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யும்போது முக்கியமாக செய்யப்படுவது எலுமிச்சை விளக்கு ஏற்றுவது மாவிளக்கு வைப்பது சர்க்கரை பொங்கல் செய்வது போன்றவை தான். இது தவிர பழங்கள் வைத்தும் அம்மனுக்கு படைப்பார்கள். ஆனால் எங்கும் இல்லாமல் ஒரு கோவிலில் வினோதமாக அம்மனுக்கு பீட்சா பர்கர் போன்றவற்றை படையலில் படைக்கிறார்கள். அந்த கோவில் எங்கு இருக்கிறது என்னவென்று இனி காண்போம்.
அம்மனுக்கு பீட்சா பர்கர் சமோசா போன்றவற்றை படைக்கும் வினோதமான கோவில் இந்தியாவில் தான் இருக்கிறது. அது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தான் இந்த கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் துர்க்கை அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கிருக்கும் அம்பாளை தூமாவதி அம்மன் என்று சொல்லி அழைக்கிறார்கள்.
இந்த தூமாவதி அம்மன் கோவில் அந்த மாநிலத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்தது. அதிகப்படியான பக்தர்கள் இங்கு வந்து செல்லுவர். அப்படி இந்த தூமாவதி அம்மனுக்கு வருகிற பக்தர்கள் அனைவரும் பீட்சா பர்கர் சமோசா போன்றவற்றை வைத்து வழிபடுவது வழக்கமாக நடைபெறுகிறது. இதனாலே இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றிருக்கிறது.