பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த மனோகர் படேல் என்ற 62 வயது முதியவர், தனது 40 வயது மகன் மனிஷ் கடத்தப்பட்டுவிட்டதாகக் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். தொழில் விஷயமாக வெளியூர் செல்வதாகக் கூறிச் சென்ற மகனின் செல்போனில் இருந்தே வந்த வாட்ஸ்அப் அழைப்பில் பேசிய மர்ம நபர்கள், 90 லட்சம் ரூபாய் பிணைத்தொகை கொடுக்காவிட்டால் மனிஷைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். பதற்றமடைந்த தந்தை, மகனைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உடனடியாகக் காவல்துறையினரின் உதவியை நாடினார்.
வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர், பிணைத்தொகை கேட்டு வந்த மற்றொரு செல்போன் அழைப்பின் சிக்னலைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து ஹாசன் பகுதியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். அங்குச் சென்றபோதுதான், எந்தவித ஆபத்துமின்றித் தனது இரண்டு நண்பர்களுடன் மனிஷ் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. தந்தையிடம் இருக்கும் தொண்ணூறு லட்சம் ரூபாய் பணத்தை எளிதாக ஏமாற்றிப் பறிப்பதற்காக, நண்பர்களோடு சேர்ந்து அவரே இந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் அம்பலமானது. இந்த நூதன மோசடி தொடர்பாக, மனிஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் 13 வயதுச் சிறுமியை முத்தமிட்டதாகக் கூறி, 18 வயது இளைஞர், அவரது தந்தை மற்றும் நண்பர் ஆகியோர் கொடூரமாகத்…
மகாராஷ்டிராவில் திறந்தவெளியில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை நோக்கிச் சிறுத்தை ஒன்று மெல்லப் பாய்ந்து வர முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தெருவின் சந்துக்குள் தனது ஆட்டோவை திடீரென நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த குடிநீர்…
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், சாங்கெஷ்ரா கிராமத்திற்கு அருகே அக்டோபர் 25 அன்று இரவு காரொன்று பள்ளத்தில் விழுந்து…
கிழக்கு டெல்லி வினோத் நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல் நைசாக நுழைந்த மர்ம நபர் ஒருவர்…
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…