gv

2024 இல் அதிகம் தோல்வி படங்களில் நடித்த இரண்டு ஹீரோகள்… ரெண்டு பேருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கு…

By admin on மார்கழி 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இந்த வருடம் குறிப்பிடத்தக்க வகையில் பல திரைப்படங்கள் வெளியானது. இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமரன் போன்ற திரைப்படங்கள் வெளியாது. இந்த வருடத்தில் பல வெற்றி படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்கள் தோல்வியும் அடைந்து இருந்திருக்கிறது. அப்படி இந்த வருடம் சினிமாவில் தோல்வி படங்களில் நடித்த இரண்டு ஹீரோக்களை பற்றி இனி காண்போம்.

   

இந்த வருடம் அதிக தோல்வி படங்களில் நடித்த இரண்டு ஹீரோக்கள் விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் இவர்கள் இருவரும் இசையமைப்பாளர்களாக இருந்து வருகின்றனர். இசையமைப்பாளர்களாக இருந்து கொண்டு நடிகராகவும் இருக்கின்றனர். இவர்கள் நடிப்பில் இந்த வருடம் விஜய் ஆண்டனியின் மூணு திரைப்படமும் ஜி வி பிரகாஷின் 3 திரைப்படமும் வெளியானது.

   

விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் ரோமியோ மழை பிடிக்காத மனிதன் மட்டும் ஹிட்லர். ஜி வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மூன்று திரைப்படங்கள் ரில் கள்வன் மற்றும் டியர். இந்த ஆறு படங்களும் பெரிதாக பேசப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் இருவரும் இந்த படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்திருந்தார்கள்.

 

ஆனால் இந்த வருடத்தில் வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தது வெகுவாக பாராட்டப்பட்டது. விஜய் ஆண்டனியும் நன்றாக இசையமைக்க கூடியவர் தான். அதனால் அவர்கள் இருவரும் சிரமப்பட்டு நடிப்பதை விட இசையின் மீது கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.