தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அவர் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார்.
இதனிடையே தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த கையோடு பல்வேறு விஷயங்களை பகிர்ந்த நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றி கழகம் கட்சியின் பிரச்சார செயலாளர் பதவியை விஜையிடம் கேட்டதாக கூறியுள்ளார். இந்த பொறுப்பில் ஏற்கனவே ராஜ்மோகன் இருக்கும் நிலையில் இவரும் இந்த பதவியை கேட்டிருப்பது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியில் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆனந்துக்கு கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இந்த சவாலையும் விஜய் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
