அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் அரிசியை மட்டும் இந்த மாதமே பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 முதல் 35 கிலோ அரிசியை ஏற்கெனவே பெற்றவர்களும் ரேஷன் கடைகளில் இந்த மாதமே அடுத்த மாதத்திற்கான அரிசியை பெற்று கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை காலத்தில், மழை அதிகம் பெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டு தான் மக்களுடைய நலனுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
