திருவள்ளூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்கப்படும் அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவதையோ அல்லது சட்டவிரோதமாக பதுக்கப்படுவதையோ தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதைக் கண்டறிந்தாலோ அல்லது அதுகுறித்த தகவல்கள் கிடைத்தாலோ பொதுமக்கள் உடனடியாக 1800-599-5950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடு, பொருட்கள் சரிவர வழங்கப்படாதது மற்றும் சேவை குறைபாடுகள் உள்ளிட்ட ரேஷன் கடை சார்ந்த இதர புகார்களைத் தெரிவிக்க 1967 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தலாம். பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி இந்த எண்களைப் பயன்படுத்தி முறைகேடுகள் குறித்து தகவல் அளிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
