உங்க போனுக்கு இந்த நம்பரில் இருந்து அழைப்பு வருதா?.. SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு..!

By Nanthini on ஆனி 7, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்ன தான் மக்கள் மத்தியில் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது புதுவிதமான மோசடி ஒன்று நடைபெற்ற வரும் நிலையில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது தற்போது வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து மோசடி கும்பல் புதுவித மோசடியில் ஈடுபட்டுள்ளது.

   

மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி +91 – 1600 என்று தொடங்கும் எண்களில் இருந்தே வங்கி தன் கஸ்டமர்களுக்கு போன் செய்யும் என்றும் அனைத்து வகையான ட்ரான்ஸாக்ஷன் மற்றும் சேவைகளுக்கு இகையே உண்மையான எண்கள் என்றும் கூறியுள்ளது. வேறு எண்களில் இருந்து எஸ்பிஐ வங்கி பெயரில் வரும் போன் கால்களை வாடிக்கையாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.