திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் தமிழரசன். கடந்த ஜூலை 18-ஆம் தேதியன்று இரவு உணவிற்காக வெளியே சென்ற இவர், மறுநாள் அதிகாலை கன்னிகாபுரம் பகுதியில் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு, கொடூரமான வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். முதலில் திருத்தணியிலும், பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், 17 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 8-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
குற்றவாளிகளைத் தேடி வந்த காவல்துறையினரின் விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தமிழரசனின் மனைவி பிரியாவிற்கும், காட்பாடியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான ஜெயக்குமார் என்பவருக்கும் திருமணத்திற்கு முன்பே காதல் இருந்துள்ளது. திருமணத்திற்குப் பின் தடைபட்டிருந்த இவர்களது தொடர்பு, சில வருடங்களுக்குப் பிறகு ‘இன்ஸ்டாகிராம்’ வாயிலாக மீண்டும் துளிர்த்துள்ளது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான தமிழரசனுடன் ஜெயக்குமார் திட்டமிட்டு நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
தனது முன்னாள் காதலியான பிரியாவை நிரந்தரமாக அடைய நினைத்த ஜெயக்குமார், ஜூலை 18 அன்று இரவு தமிழரசனுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். அதன் பின், அவரை வழிமறித்து மிளகாய்ப்பொடி தூவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். தடயங்களை மறைப்பதற்காக தமிழரசனின் இருசக்கர வாகனத்தை வேலூர் எல்லையில் எரித்ததுடன், அவரது செல்போனையும் எடுத்துச் சென்றுள்ளார். சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் கோபுர சிக்னல்கள் ஆகிய தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியோடு, சுமார் 25 நாட்களுக்குப் பிறகு குற்றவாளி ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…