தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில், கள்ளக்காதல் மற்றும் சொத்து தகராறு காரணமாக மனைவியே தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து கணவனை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அவஞ்சா கிராமத்தைச் சேர்ந்த எடையா (வயது 52) மற்றும் அவரது மனைவி அலிவேலு ஆகியோரின் மகள் பத்மாவிற்கும், அஞ்சநேயுலு என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை மருமகன் பெயருக்கு எழுதுமாறு அலிவேலு தனது கணவரை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில், தனது மனைவிக்கும் மருமகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக எடையா சந்தேகப்பட்டதால், குடும்பத்தில் தினமும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
கணவன் உயிரோடு இருக்கும் வரை நிலம் கிடைக்காது என்பதை உணர்ந்த அலிவேலு, மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து எடையாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார். கடந்த ஜூன் 23-ஆம் தேதி மதியம் ஏற்பட்ட தகராறின் போது, திட்டமிட்டபடி மருமகன் மற்றும் அவரது உறவினர்கள் எடையாவை சுவரில் தள்ளி கீழே வீழ்த்தினர். மகள் பத்மா தனது தந்தையின் கால்களை அசையாதவாறு கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, மனைவி அலிவேலு இரும்பு கம்பியால் எடையாவின் மார்பு மற்றும் ரகசிய உறுப்புகளில் கொடூரமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த எடையா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலைக்கு பிறகு, எடை உடல்நலக்குறைவால் இயற்கையாகவே இறந்துவிட்டதாகக் கூறி அலிவேலு நாடகமாடினார். இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் திரண்டிருந்த வேளையில், எடையாவின் உடலைக் குளிப்பாட்டும்போது அவரது மார்பிலும் உடலிலும் இருந்த ஆழமான காயங்களைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அலிவேலுவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தகவலறிந்து வந்த போலீஸார் எடையாவின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, கொலைக் குற்றவாளிகளான மனைவி அலிவேலு, மகள் பத்மா மற்றும் மருமகன் அஞ்சநேயுலு ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…