இரண்டாவது முறையாக தாயான நடிகை இலியானா… குழந்தையின் போட்டோவை வெளியிட்டு அறிவிப்பு… குவியும் வாழ்த்துக்கள்..!!

By Soundarya on ஆனி 28, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் இலியானா. தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயின் நண்பன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக திரைப்படங்கள் நடித்துள்ளார்.  மைக்கேல் டோலன் என்பவரை 2023-ல் திருமணம் செய்த இலியானாவுக்கு அதே ஆண்டு ஆகஸ்டில் முதல் குழந்தை பிறந்தது.

   

இந்நிலையில்  நடிகை இலியானாவுக்கு தற்போது 2-வது குழந்தை பிறந்துள்ளது. கடந்த 19-ம் தேதி பிறந்த தனது குழந்தைக்கு கீனு ரஃபே டோலன்(Keanu Rafe Dolan) எனப் பெயரிட்டுள்ளார்கள். மேலும் குழந்தையின் முதல் புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் இலியானா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.