Connect with us

“எங்க போனாலும் கடைசில என்கிட்ட தான் வரணும்”.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தால் பெரும் பயனடைந்த இளையராஜா..

CINEMA

“எங்க போனாலும் கடைசில என்கிட்ட தான் வரணும்”.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தால் பெரும் பயனடைந்த இளையராஜா..

1991 ஆம் ஆண்டு சந்தான பாரதி அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் குணா, இப்படத்தில் வரும் “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்று கொடைக்கானலில் உள்ள குணா குகையில் வைத்து வரும் பாடலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் மஞ்சமெல் பாய்ஸ். பாடலை இசையமைப்பாளர் இளையராஜா மிகப் பிரமாதமாக எடுத்திருப்பார். இப்பாடல் வந்த அந்த சமயத்திலே மிகப் பிரமாதமாக ஓடி பட்டையை கிளப்பியது பாடல்.

இப்பாடல் மூலம் மஞ்சமெல் பாய்ஸ் படத்திற்கு மாபெரும் ஒரு ப்ரோமோஷன் ஆக அமைந்திருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் திரையரங்குகள் கூட்டம் நிரம்பி வழியும் அளவிற்கு படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, ஆரம்ப காலகட்டத்தில் 3.3 கோடி என்ற மிதமான அளவில் வசூலை பெற்று, தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி அளவை தாண்டி ஒட்டுமொத்த திரை உலகில் கிட்டத்தட்ட 100 கோடி அளவை தொட்டு மகத்தான சாதனையை படைத்துள்ளது,

இதுவரையிலும் எந்த ஒரு மலையாள படமும் பண்ணாத ஒரு சாதனையை இப்படம் செய்துள்ளது. தற்போது இப்படத்தின் வெற்றியைக் கண்டு உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கமல்ஹாசன் படக்குழுவினரையும், இயக்குனர் சிதம்பரத்தையும் அழைத்து பெருமிதம் கொண்டு பாராட்டி வந்தார்கள். இவ்வளவு பிரபலங்கள் பாராட்டுவதற்கு முக்கியமாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” பாடல் மஞ்சமெல் பாய்ஸ் படத்தில் வருவதால் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

   

இப்பாடலுக்கான ராயல்ட்டியை இளையராஜா அவர்களுக்கு தந்துள்ளார்களாம். அது மட்டும் அல்லாமல் இளையராஜாவிடம் தனிப்பட்ட முறையில் இப்பாடலின் உரிமைகளை பெற்று தான் இப்படத்தில் வைத்துள்ளார்கள். கமல்ஹாசன் அவர்களிடமும் படத்தில் வைக்கப்பட்ட பாடலுக்காக அனுமதி பெற்றுள்ளார்கள். கமல்ஹாசனை கொடுத்த ஒப்புதல் காக தற்போது அவரை அழைத்து பொன்னாடை போத்தி பூமாலை கொடுத்து நன்றி தெரிவித்திருந்தார்கள்.

 
author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top