தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா என்று அனைவராலும் கொண்டாடப்படும் இளையராஜா பாடல்கள் பலருடைய மனதிற்கு இதமாகவும் பலருடைய வழியைப் போக்கும் மருந்தாகவும் இருக்கின்றது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இளையராஜா அடிக்கடி பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் சர்ச்சையை கிளப்பி விடுகின்றன. அதேசமயம் அவர் செய்யும் சாதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. திரைப்படங்களில் பிசியாக பாடல்களை எழுதி இசை அமைத்துக் கொண்டிருக்கும் இளையராஜா சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல ஊர்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

இப்படியான நிலையில் இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நான் எழுதிய சில பாடல்களை சிலர் இவர் இந்த பாட்டை காப்பி அடித்து விட்டார் என்று 50 வருடங்கள் கழித்து கூறுகின்றனர். இப்படி எல்லாம் இசை இருக்கு என்று 50 வருடங்களுக்கு முன்பே நான் உனக்கு அறிமுகப்படுத்தினேன். ஒரு வரியை தான் நான் எடுத்துப் போட்டேன் மத்தது எல்லாமே என்னோட வரிகள் தான். ஒரு வரியையும் 50 வருடத்திற்கு முன்பே நான் எடுத்துப் போட்டு இப்படி இசை இருக்கிறது என உங்களுக்கு காண்பித்துள்ளேன். என்னுடைய பாடலைக் கேட்க காட்டு யானை கூட்டம் தியேட்டருக்கு வந்திருக்கிறது.

ஒரு மலைப்பிரதேசத்தில் மலை பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் தியேட்டரில் ஒரு படம் தொடர்ந்து ஆறு வாரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிலையில் அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டு கேட்க யானை கூட்டம் வயல் வரம்புகளையும் வாழைத்தோட்டத்தையும் எதுவும் செய்யாமல் கூட்டமாக தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருக்கிறது. ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு என்ற பாட்டு தான் அது. ஒரு யானை கூட்டம் பாட்டை கேட்டுப் போனதும் மதம் பிடிக்க வந்த ஒரு யானை பாட்டை கேட்டு தூங்கியதும் எங்காவது நடந்திருக்கா. நான் இதை சொன்னால் அவருக்கு ரொம்ப தலைகனம் என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

எனக்கு வராம வேற யாருக்கு டா கர்வம் வரும்? எனக்கு தான் இந்த திமிரு ஜாஸ்தியா இருக்கணும். ஏனென்றால் இந்த உலகத்துல யாரும் செய்யாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். அப்படி செய்யும் எனக்கு திமிரு இல்லாமல் எப்படி இருக்கும். இதையெல்லாம் நினைக்கும் போது எனக்கு திமிர் வருமா இல்லையா? ஆனா எனக்கு அந்த திமிர் இல்ல. வெளியில் இருந்து சொல்றாங்க எனக்கு திமிர் இருக்குனு. அப்போ அவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும். நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துகிட்டு நீ என்ன வேணாலும் பேசிக்கோன்னு ஏன் வேலைய பாத்துட்டு இருந்தா ரொம்ப கர்வம் ஜாஸ்தி என்று சொல்றாங்க. கர்வம் என்பது எப்போது வரும்? நல்லதா ஒரு வேலையை பண்ணிட்டா உனக்கு கர்வம் வரும். நீ ஒண்ணுமே பண்ணாம அவருக்கு மட்டும் கர்வம் இருக்கு என்று சொன்னால் எப்படி என்று இளையராஜா பேசியுள்ளார்.
