தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தற்போது வலம் வந்து கொண்டுள்ளவர் யுவன் சங்கர் ராஜா. 90களில் ஆரம்பித்த இவரது இசை பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டுள்ளது. தீம் இசை என்றாலும் ஹிட் பாடல் என்றாலும் உடனடியாக ரசிகர்கள் நினைவுக்கு வருபவர் யுவன் சங்கர் ராஜா. பில்லா திரைப்படத்தில் நடிகர் அஜித் நடந்து வரும்போது ஒலிக்கும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை யாராலும் மறக்க முடியாது. இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா.
24 ஆண்டுகளாக தன்னை ஒரு முன்னணி இசையப்பரிப்பாளராக தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டுள்ளார். தனக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பவர் , யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் தன் குரலால் தனி முத்திரை பதித்துள்ளார். இவர் இசையமைப்பில் வெளிவந்த விருமன், காபி வித் காதல், லவ் டுடே போன்ற திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகியது. இதை தொடர்ந்து இவர் தற்பொழுது பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு வருகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் சகோதரியான பவதாரிணி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ,சிறுவயதிலேயே உயிரிழந்தார். இந்த எதிர்பாராத நிகழ்வு இளையராஜா அவர்களின் குடும்பத்தையும், மொத்த திரையுலகையுமே சோகத்தில் ஆழ்த்தியது. பவதாரிணி அவர்கள் பல சூப்பர் ஹிட் பாடல்களை திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர். இந்நிலையில், இளையராஜா, “என் அருமை மகள் பவதாரிணி எங்களைவிட்டு பிரிந்த நாள்.
அன்பே உருவான இந்த மகள் பிரிந்த பிறகுதான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம், எனது கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் எனது குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டது எனக்கு இப்போது வேதனையை தருகிறது. அந்த வேதனைதான் மக்களை எல்லாம் ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் எனக்கும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. பவாதிரிணியின் பிற இசை கலைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது மகள் பவதாரிணியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…