Connect with us

6 பெரிய நடிகர்களின் 100-வது படத்துக்கு இசையமைத்த இளையராஜா.. Guinness புத்தகத்தில் இடம் பிடிப்பாரா..?

CINEMA

6 பெரிய நடிகர்களின் 100-வது படத்துக்கு இசையமைத்த இளையராஜா.. Guinness புத்தகத்தில் இடம் பிடிப்பாரா..?

 

60 காலகட்டத்தில் சினிமாவில் தன் பயணத்தை ஆரம்பித்த இளையராஜா. அவர்கள் இப்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் வேலை செய்து 6000-க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்து பல மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளார். முதல் முதலில் தமிழ் சினிமாவில் வெஸ்டர்ன் இசையை அறிமுகம் செய்தவர் இவர் தான். இவர் இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட நேஷனல் அவார்டுகளும் பல இன்டர்நேஷனல் அவார்டுகளும் பெற்றுள்ளார்.

இசைக்காக கிட்டத்தட்ட 46 வருட காலமாக தன் வாழ்வையே அர்ப்பணித்து இருக்கிறார். அதுபோல் இவர் ஆறு மாபெரும் ஹீரோக்களுக்கு நூறாவது படத்தில் இளையராஜா தான் இசையமைத்துள்ளார். தற்போது அந்த ஹீரோக்கள் யார் அவர்களின் நூறாவது படம் என்ன என்று பார்ப்போம்;

   

1981 ஆம் ஆண்டு சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் மாதவி நடிப்பில் வெளிவந்த “ராஜ பார்வை” படம் தான் கமல்ஹாசனின் நூறாவது படம். இப்படத்தில் இளையராஜா அவர்கள் தான் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கு படமான “அம்மாவாசையா சந்துருடு” என்ற படத்தை ரீமேக் செய்யப்பட்ட படமாகும்.

1985இல் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் தான் “ஸ்ரீ ராகவேந்திரன்”. இப்படம் ரஜினியின் நூறாவது படமாகும், இப்படத்தில் லட்சுமி விஷ்ணுவர்தன் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ஹிந்தி படமான “ராகவேந்திரா தீர்த்தர்” என்ற படத்தை ரீமேக் செய்த படமாகும்.

1991ல் ஆர்.கே செல்வமணி அவர்கள் இயக்கத்தில் விஜயகாந்த், மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன் போன்றவர்கள் நடிப்பில் வெளிவந்த படம் தான் “கேப்டன் பிரபாகரன்”. இப்படம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நூறாவது படமாகும், இப்படத்தில் சரத்குமார் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் வந்து விஜயகாந்த் அவர்களின் நட்பிற்காக நடித்துக் கொடுத்திருப்பார்.

1989 பி. வாசு அவர்கள் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் ஷோபனா அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம் தான் “வாத்தியார் வீட்டுப்பிள்ளை” ஆகும். இப்படம் சத்யராஜினின் 100வது படமாகும், இந்த படம் வெளியான அதே சமயத்தில் சத்யராஜின் இன்னொரு படமான திராவிடன் படமும் ஒரே சமயத்தில் திரையில் திரையிடப்பட்டது, ஆனால் இப்படம் தான் முதலில் தயாரிக்கப்பட்டு நூறாவது படமாக இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

1994 இல் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் அன்று பிரபுவின் நூறாவது படமான “ராஜகுமாரன்” படம் வெளியானது. இப்படத்தை பிரபுவுடன் பிரபல ஹீரோயின்களாக வளம் வந்த மீனா, நதியா இருவரும் சேர்ந்து நடித்திருப்பார்கள். பிரபுவின் இந்த நூறாவது படத்திலும் இசைப்புயல் இளையராஜா தான் இசையமைத்துள்ளார்.

1978ல் கன்னட படமான “பரசங்கட கெண்டத்தியம்மா” என்ற படத்தை சிவக்குமார் அவர்கள் தமிழில் ரீமேக் செய்து நடித்த படம் தான் 1978 இல் வந்த “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” இப்படத்தை தேவராஜ் மோகன் அவர்கள் இயக்கத்தில் சிவக்குமார், சிவா சந்திரன், தீபா போன்றவர்களின் நடிப்பில் வெளிவந்த இப்படம் தான் சிவகுமாரின் நூறாவது படமாகும். இப்படமான சிவகுமாரின் நூறாவது படத்திற்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் தான் இசையமைத்துள்ளார்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top