3 படங்களுக்கு 3 மணி நேரத்தில் 21 டியூன் போட்ட இளையராஜா.. மிரண்டுபோன இயக்குனர்கள்..!

By Nanthini on கார்த்திகை 6, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் 48 வருடங்களுக்கு மேலாக சிறந்த இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா. இந்திய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேசமயம் உலக அளவில் 20,000 மேற்பட்ட இசைக்கச்சேரிகளை அவர் நடத்தியுள்ளார். மறைந்த இசை மேதை எம்எஸ் விஸ்வநாதனுக்கு அடுத்தபடியாக தமிழ் திரை உலகில் என்றளவும் மிகப்பெரிய புகழோடும் திறமையோடும் வலம் வந்து கொண்டிருக்கும் இளையராஜாவை இசையில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

Vikatan Select - 21 August 2022 - ராஜாவின் பார்வையில் - இளையராஜா - Rajavin  Parvaiyil - Ilaiyaraaja -1 - Vikatan

   

இன்றைய காலகட்டத்தில் ஒரு பாடலை அமைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் நிலையில் 1980 களின் தொடக்கத்தில் இளையராஜா மிக மிக பிஸியான இசையமைப்பாளராக இருந்து வந்த சமயத்தில் ஒரே நாளில் பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். அதாவது ஒரு நாள் காலை 6 மணி முதல் 9 மணி வரை வெறும் 3 மணி நேரத்தில் மூன்று வெவ்வேறு திரைப்படங்களுக்கு மொத்தம் 21 பாடல்களுக்கான டியூனை அமைத்து மூன்று இயக்குனர்களையும் இளையராஜா மிரட்டினார். கடந்த 1991 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசான திரைப்படம் தான் இயக்குனர் கே.ஆரின் ஈரமான ரோஜாவே.

   

Dhanush Speech: விடுதலை பாடல் ரெக்கார்டிங்கில் இளையராஜா சொன்ன வார்த்தை?  ஓரமாக நின்ற தந்தையின் முக்கால்.. தனுஷ் பகிர்த தகவல்!

 

நடிகை மோகினி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் நடிகர் சிவசுப்பிரமணியம் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் மெகா ஹிட் ஆனதுக்கு முக்கிய காரணம் அதில் ஒலித்த ஏழு பாடல்கள் தான். அதோ மேக ஊர்வலம், கலகலப்பு மணி ஓசை மற்றும் தென்றல் காற்றே வா வா என்ற பாடல்கள் காலம் கடந்தும் இன்றும் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்படுகின்றன. இதற்காக காலை 6:00 மணிக்கே சென்ற இளையராஜா வெகு சில நிமிடங்களில் அந்த திரைப்படத்தின் ஏழு பாடல்களுக்கான இசையை அமைத்துக் கொடுத்துள்ளார்.

Ilayaraja Songs : மூன்றே மணிநேரம்; 3 படங்களுக்கு 21 டியூன் போட்டு மிரட்டிய  இளையராஜா - என்னென்ன படங்கள் தெரியுமா?

அதேசமயம் அந்த இடத்திற்கு பிரபல இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் ஆகிய இருவரையும் இளையராஜா வர சொல்லியுள்ளார். ஈரமான ரோஜாவே படத்தின் பாடல்களை அமைத்து முடித்த பிறகு 3 மணி நேரத்திர்க்குள் பிரதாப் போத்தனின் மை டியர் மார்த்தாண்டன் மற்றும் இயக்குனர் பாரதிராஜாவின் நாடோடி தென்றல் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார். மொத்தம் மூன்று மணி நேரத்தில் மூன்று திரைப்படங்களுக்கு சுமார் 21 பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்து மூன்று இயக்குனர்களையும் வியக்க வைத்தார்.