Connect with us

இயக்குனரிடம், இந்த எடத்துல ஒரு பாட்டு ஒன்னு கம்போஸ் பண்ணி தரேன் போடுன்னு சொன்ன இளையராஜா.. செம்ம ஹிட்டான ரஜினியின் அந்த பாட்டு..

TRENDING

இயக்குனரிடம், இந்த எடத்துல ஒரு பாட்டு ஒன்னு கம்போஸ் பண்ணி தரேன் போடுன்னு சொன்ன இளையராஜா.. செம்ம ஹிட்டான ரஜினியின் அந்த பாட்டு..

 

சில சமயங்களில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக அப்ப படத்தினுடைய கதை, கதாபாத்திரங்களின் தேர்வு, திரைக்கதை வசனம், பாடல்கள் ஒளிப்பதிவு என பல விஷயங்களும் அப்படத்தை வெற்றி படமாக மாற்றுகின்றன. இதில் ஏதாவது ஒன்று சரிவை சந்தித்தாலும் கூட அப்படம் முழுவதுமே சரிவை சந்திக்க நேரிடும். அது மட்டுமல்லாமல் ஒரு படம் என்பது பலரின் கூட்டு முயற்சியாக தான் உருவாக்கும்.

#image_title

   

ஒரு சில இயக்குனர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என தன்னுடைய கதையை மட்டுமே ஒளிப்பதிவு செய்து அதை படமாக வெளியிடுவர். ஒரு சில இயக்குனர்கள் பிற தொழில்நுட்ப கலைஞர்களும் கூறக்கூடிய சிறு சிறு திருத்தங்களை தனது படத்தில் திருத்திக் கொண்டு அதன் பிறகு ஒளிப்பதிவு செய்து அதை வெளியிடுவர். ஒரு சில நேரத்தில் இவை அப்பிடத்திற்கு பெரிதும் கை கொடுப்பதாக இருக்கும். அந்த வகையில் தான் ரஜினிகாந்தினுடைய படிக்காதவன் படத்தில் இளையராஜா கொடுத்த ஒரு சின்ன அட்வைஸ் அப்படத்தையே வேறு தளத்திற்கு எடுத்து சென்றது என கூறலாம்.

1985 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அம்பிகா சிவாஜி உட்பட பலர் நடிப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் படிக்காதவன். வக்கீலான சிவாஜி தன் இரண்டு தம்பிகள் மீது உயிரையே வைத்திருப்பார் சிவாஜியின் தோற்றத்திற்கும் சிறுவர்களுக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால் இரண்டாம் தாரத்தின் பிள்ளைகள் என்பது போல ஒரு பாயிண்டை சாமர்த்தியமாக இணைத்து இருப்பார்கள். சமையல் உள்ளிட்ட விஷயங்கள் சிரமமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வார் சிவாஜி. ஆனால் வந்த அந்நியோ இரண்டு தம்பிகளையும் கடுமையாக திட்டி வீட்டை விட்டு துரத்திவிடுவார்.

#image_title

பிரிந்த சகோதரர்கள் கடைசியில் இணைந்தார்களா? என்பது தான் படிக்காதவன் படத்தின் கதை. இளையராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் அனைத்தும் பாட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. குறிப்பாக ’ஊர தெரிஞ்சுகிட்டேன்’ என்ற பாடல் இன்றைய வரைக்கும் துரோகத்தால் வீழ்ந்தவர்களுக்கு ஒரு ஃபேவரிட் பாடலாக இப்பாடல் இருக்கும். இப்பாடல் இப்படத்தில் இடம்பெறுவதற்கு ஒரு சுவாரசியமான நிகழ்வை நினைவு கூறலாம்.

#image_title

அதாவது இப்படத்தை முழுமையாக முடித்துவிட்டு இயக்குனர் ராஜசேகர் இப்படத்தை இளையராஜா அவருக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார். இப்படத்தை பார்த்த இளையராஜா இந்த இடத்தில் ஒரு பாடல் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என கூறியிருக்கிறார். அந்தக் காலத்தில் இளையராஜாவின் சொல்லை தட்டுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்திருக்கவில்லை. தயாராப்பாளர்கள் கியூ வில் நின்று அவரிடம் கால்ஷீட் வாங்கிய காலம் அது.

#image_title

மறுநாள் இளையராஜா தன்னுடைய ஸ்டுடியோவிற்கு சென்று மதியத்திற்குள் ஒரு பாட்டை தயார் செய்து அதை அப்படத்தில் இணைக்க கூறியிருக்கிறார். அவசர அவசரமாக அன்று இரவே செட்டு போட்டு இந்த பாடலுக்கான காட்சிகளையும் எடுத்திருக்கின்றனர். பிறகு படம் திரையிட்ட பிறகு இளையராஜாவால் இணைக்கப்பட்ட அந்த பாடல் மிகப்பெரிய பலத்தை இப்படத்திற்கு கொடுத்தது என்னலாம். அந்த பாடல் தான் ’ஊர தெரிஞ்சுகிட்டேன்’ பாடல்.

author avatar
Archana
Continue Reading
To Top