என் திறமையை முன்னணி இயக்குனர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை… ஆனா பஞ்சு அருணாசலம்?.. இளையராஜா பகிர்ந்த சம்பவம்!

By vinoth on ஐப்பசி 22, 2024

Spread the love

சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை  விரைவில் தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

   

அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது. அதன் பின்னர் இளையராஜா பல படங்களுக்கு இசையமைத்து பல ஹிட்ஸ்களைக் கொடுத்தாலும் முன்பைப் போல அவர் பிஸியான இசையமைப்பாளராக இல்லை.

   

#image_title

 

இந்நிலையில் இளையராஜா தன்னை நம்பி எப்படி பஞ்சு அருணாசலம் எப்படி முதல் பட வாய்ப்புக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “நான், எத்தனையோ முன்னணி இயக்குனர்களுக்கு –எஸ் பி முத்துராமன், தேவராஜ் மோகன் – போன்றவர்களுக்கு எல்லாம் ஆர்கெஸ்ட்ரா வைத்து வாசித்துக் காட்டியுள்ளேன். ஆனால் அவர்களால் எல்லாம் என் திறமையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் பஞ்சு அண்ணனிடம் நான் சும்மா மேசையில்தான் தாளம் போட்டு காட்டினேன். அவர் சரியாக என்னுடையத் திறமையைக் கண்டறிந்து கொண்டார். அதை வைத்தே என்னை அன்னக்கிளி படத்துக்கு இசையமைப்பாளர் ஆக்கினார்” எனக் கூறியுள்ளார்.