“நான் மியூசிக் போட்டு காமிச்சா ச்சீ.. த்தூன்னு சொல்வாரு… வழிகாட்ட கூட யாருமில்ல…” தனது அப்பா இளையராஜா குறித்து ஓப்பனாக பேசிய மகன் கார்த்திக் ராஜா…  

By Begam

Published on:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இசையால் காட்டி போட்டு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா. இவரின் இசைக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் பல பாடல்களும் இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

இவர் இதுவரை 1000  பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே இளையராஜாவிற்கு ஜீவா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு கார்த்தி ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றனர். இவரது மகளான பவதாரிணி சமீபத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இந்நிலையில் நேர்காணலில் பங்கேற்ற கார்த்திக் ராஜாவிடம், “நீங்க அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா?” என கேள்வி தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதற்கு அவர், “நான் அம்மா பிள்ளை தான்.

எப்போதும் அப்பா மீது மரியாதை தான் இருக்கிறது. வீட்டுலையும் அப்பா தான் சைலன்ட்.  மற்ற குடும்பம் மாதிரி வாப்பா… அங்க போலாம். இங்க போலாம் அப்படி எல்லாம் கூப்பிட முடியாது. ரொம்ப கண்டிப்பா இருப்பார். அவர் எங்ககிட்ட பேசுறதையே நாங்க பெருமையா நினைப்போம். அப்பா கிட்ட ஏதாவது பாட்டு போட்டு காட்டினால்,  ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு.  அந்த சமயத்தில் என் மனசு கஷ்டமா இருக்கும். நமக்கு வழிகாட்டகூட ஆள் இல்லையேன்னு’ என்று சற்று மனவருத்தத்துடன் கார்த்திக் ராஜா கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…