Music Director Ilayaraja

சத்குருன்னு சொல்றவன் எல்லாம் சத்குரு ஆக முடியாது… இசைஞானி இளையராஜா ஆவேசம் – ஜக்கியை சொல்கிறாரா என ஷாக் ஆன ஈஷா அன்பர்கள்!

By Elango on மாசி 19, 2026

Spread the love

கோவையில் வெள்ளியங்கிரி மலை அருகில் ஈஷா யோகா மையம் உள்ளது. இதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சத்குரு என ஈஷா அன்பர்களால் அழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார். கடந்த 15ம் தேதி நடந்த மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பாரத பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் இந்த ஈஷா மையத்துக்கு வருகை தந்துள்ளனர். தவிர பல இந்திய நடிகர்கள் நடிகைகள் கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் ஈஷா மையத்துக்கு வந்து சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்து பேசுகின்றனர்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா பேசியதாவது, எல்லோருக்கும் பேதம் இல்லாத அன்பை காட்டுபவன் தான் சத்குரு. சத்குருன்னு சொல்லிக் கொள்பவன் எல்லாம் சத்குரு கிடையாது. சத்தியமாக சத்குரு ஆக முடியாது என்று இளையராஜா பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஈஷாவை சேர்ந்த அன்பர்கள், ஈஷா யோக மையம் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவை தான் இளையராஜா இப்படி விமர்சிக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.