Connect with us

இளையராஜா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த அந்த படம்… நடந்துருந்தா செம்மயா இருந்திருக்குமே..

CINEMA

இளையராஜா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த அந்த படம்… நடந்துருந்தா செம்மயா இருந்திருக்குமே..

தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய சினிமாவிலெயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்தவர் இளையராஜா. அவரை இசைஞானி, ராகதேவன் என பல பெயர்களில் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

#image_title

அன்னக்கிளி திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக விளங்கினார். 80 கள் மற்றும் 90களில் படத்தின் போஸ்டரில் இளையராஜாவின் புகைப்படத்தை போட்டாலே விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கிக் கொள்ளும் சூழல் நிலவியது. இதனால் ஒரு ஆண்டில் அதிகபட்சம் 55 படங்களுக்கு எல்லாம் இசையமைத்து சாதனைப் படைத்துள்ளார்.

   

பாடல்களுக்கு இசையமைப்பது மட்டுமில்லாமல் பாடல்கள் எழுதுவதிலும் தனித்திறன் பெற்றவர் இளையராஜா. நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதுபோல புகைப்படம் எடுப்பதிலும் தனி ஆர்வம் கொண்டவர். அவரின் புகைப்படங்களைக் கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார்.

 

#image_title

கடிவாளம் போட்டது போல இசையில் மட்டுமே கவனத்தை செலுத்திய இளையராஜா ஒரு படத்தை இயக்க இருந்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுவும் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார் என்றால் யாராலும் நம்ப முடியாது.

ஆம் அப்படி ஒரு வாய்ப்பு வந்ததாக இளையராஜாவே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் இளையராஜாவை எடுத்த ஒரு நேர்காணலில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் நிறுவனம் ரஜினியை வைத்து 1989 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா என்ற படத்தை எடுத்தது. அந்த படத்தை இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார்.

#image_title

ஆனால் முதலில் இந்த படத்துக்கு இயக்குனர் யார் என்று முடிவு செய்யப்படவில்லையாம். அப்போது இளையராஜா வேண்டுமென்றால் நானே இந்த படத்தை இயக்கிவிடுகிறேன் எனக் கூறினாராம். ஆனால் அப்போது அவர் இருந்த பிஸியான சூழலில் அது சில பல காரணங்களால் அந்த படம் நடக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக அமைந்திருக்கும்.

Continue Reading
To Top