Director K. Bhagyaraj

எனக்கே பாடம் எடுத்த வாத்தியார் கே பாக்யராஜ்… அட இவரா இப்படி சொல்வது என அசந்து போன ரசிகர்கள்!

By Elango on மாசி 4, 2026

Spread the love

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா மேடையில் பேசியதாவது, ஒருமுறை பாரதிராஜா, பாக்யராஜை என்னிடம் கதை சொல்ல அனுப்பிச்சு இருந்தார். அன்னைக்கு அவர் கதை சொன்னதை கேட்டு நான் அப்படியே அவுட் ஆகிட்டேன். அன்னிக்கு அவர் சொன்ன கதை, ஸ்கிரீன் பிளே கேட்டு அசந்து போயிட்டேன். சிரித்து சிரித்து வயிறு எல்லாம் புண்ணாகி போய் விட்டது. சிரிச்சுக்கிட்டே நான் கம்போஸ் பண்றதே மறந்து விட்டுட்டேன்.

அதுக்கு அப்புறம் நான் தெரிஞ்சுக்கிட்டேன். நாம அவரை ஒரு மாதிரியா ட்ரீப் பண்ணிட்டோம். அது ரொம்ப தவறு. யார்கிட்ட என்ன திறமைன்னு நாம் யார் அதை டிசைட் பண்றது அப்படீன்னு ஒரு தீர்மானம் வந்தது. அன்று முதல் புதுசா யார் வந்தாலும் மியூசிக் பண்றதுங்கற முடிவுக்கு நான் வந்துட்டேன். அவங்களை மறுக்கவே கூடாதுன்னு முடிவும் செஞ்சேன். அந்த முடிவுக்கு காரணமாக இருந்தது பாக்யராஜ் தான். அவர் எனக்கு ஒரு பாடம் கொடுத்தார். எனக்கே ஒரு பாடம் கொடுத்த வாத்தியார் அவர்தான் என்று இளையராஜா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.