Connect with us

6 பாட்டுக்கும் 6 கவிஞர்களைப் பயன்படுத்திய இளையராஜா… போட்டி போட்டு சூப்பர் ஹிட்ஸ் கொடுத்த ஜாம்பவான்கள்!

CINEMA

6 பாட்டுக்கும் 6 கவிஞர்களைப் பயன்படுத்திய இளையராஜா… போட்டி போட்டு சூப்பர் ஹிட்ஸ் கொடுத்த ஜாம்பவான்கள்!

 

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

இந்நிலையில் 80 களில் தன்னுடைய புகழின் உச்சத்தில் இருந்த இளையராஜா, எந்தந்த ட்யூனை யார் யாருக்குக் கொடுத்தால், சிறப்பான பாடல்கள் வரும் என்பதை உணர்ந்தவர். அதுவும் அவரின் பாடல்கள் வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது. அப்படி 1985 ஆம் ஆண்டு வெளியான உதயகீதம் படத்தில் வந்த 6 பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.

இந்த படத்தின் ஆறு பாடல்களையும் அப்போது முன்னணியில் இருந்த ஆறு வெவ்வேறு பாடல் ஆசிரியர்களை எழுதவைத்தார் இளையராஜா. அந்த படத்தின் ஹைலைட் பாடலனா “சங்கீத மேகம்” பாடலை முத்துலிங்கம் எழுத, ”பாடு நிலாவா” பாடலை மு மேத்தா எழுதினார். என்னோடு பாட்டு பாடுங்கள் என்ற பாடலை எம் ஜி வல்லபன் எழுதினார்.

தேனே தென்பாடி தமிழே என்ற பாடலின் இரு வெர்ஷன்களை வாலி எழுதினார். உதயகீதம் என்ற பாடலை வைரமுத்து எழுத, மானே தேனே என்ற பாடலை நா காமராசன் எழுதினார். இவர்கள் அனைவருமே அப்போது உச்சத்தில் இருந்த பாடல் ஆசிரியர்கள். ஆனாலும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்தாலும் அனைத்து பாடல்களும் ஹிட்டாகும் விதத்தில் வரிகளை எழுதி இருந்தார்கள்.

ஆனால் காலம் செல்ல செல்ல அனைத்து பாடல்களையும் ஒரே பாடலாசிரியரை வைத்து எழுதும் வழக்கம் தமிழ் சினிமாவில் உருவாக ஆரம்பித்தது.

Continue Reading
To Top