இந்த சீன் கன்றாவியா இருக்கு… இளையராஜா விமர்சனம் சொன்னால் பாரதிராஜாவின் ரியாக்‌ஷன் இப்படிதான் இருக்குமாம்!

By vinoth on ஜூலை 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் அவரின் பயோபிக் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்துக்கும் அவரே இசையமைக்கிறார். இளையராஜாவைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் தன்னுடைய வாழ்க்கையை இசைக்கும் ஆன்மீகத்துக்கும் மட்டும் ஒப்புக் கொடுத்து வாழ்பவர் என்பது தெரியும். தன்னுடைய வாழ்க்கையை ஒரு துறவி போல வாழ்ந்து வருகிறார்.

   

சமீபத்தில் சென்னையில் அவரின் இசை நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக நடந்தது. அந்த நிகழ்ச்சியின் நடுவே அவர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் முக்கியமாக தன்னிடம் இருந்து சிறப்பான இசையை வாங்கிய இயக்குனர்கள் மணிரத்னம், மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா ஆகியோர் எப்படி பாட்டு வாங்குவார்கள் என்பதைப் பற்றி பேசியுள்ளார்.

   

அவர்கள் யாருமே பாடல் எப்படி வேண்டும் என சொன்னதில்லையாம். சூழ்நிலையை மட்டும் சொல்லிவிட்டு நீங்களே எப்படி வேணாலும் பாட்டு போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார்களாம். அதிலும் தன்னுடைய நண்பர் பாரதிராஜாவிடம் “இந்த இடம் கண்றாவியா இருக்குய்யா… இதுல ஒரு பாட்டு வையுய்யா’ன்னு சொன்னேன்னா. ‘அப்படியா போட்டுவிடு’ன்னு சொல்லிடுவடௌ. அப்படித்தான் ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ பாட்டு உருவானது.” என்று கூறியுள்ளார்.