யாரைக் கேட்டு இத பண்ணீங்க.. குட் பேட் அக்லி தயாரிப்பாளரிடம் 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா..!

By Nanthini on சித்திரை 15, 2025

Spread the love

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில் அஜித் கேங்ஸ்டர் ஆக நடித்திருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியடைந்த நிலையில் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூலிலும் சட்டை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

அஜித் சாருடன் பணிபுரியும் ஒவ்வொரு நாளும் ஒரு கொண்டாட்டம்!" - 'குட் பேட்  அக்லி' படத்தில் அர்ஜுன் தாஸ் அனுபவம் என்ன? - Deep Talks Tamil

   

இந்தப் படத்தில் ஒத்த ரூபாய் தாரேன், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி, ஆலுமா டோலுமா ஆகிய பாடல்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பழைய பாடல்கள் அனைத்துக்கும் வில்லன் அர்ஜுன் தாஸ் டான்ஸ் ஆடி அசத்தினார். அதிலும் குறிப்பாக ஒத்த ரூபாய் தாரேன் மற்றும் இளமை இதோ இதோ பாடல்கள் மீண்டும் வேற லெவலில் ரீச் ஆகி உள்ளது. இந்த பாடல்கள் அனைத்தும் இசைஞானி இளையராஜா பாடல்கள் என்பதால் அவருடைய அனுமதி பெற்றார்களா இல்லை என்றால் நோட்டீஸ் வரும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படியான நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

   

குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்

 

நான் இசையமைத்த பாடல்கள் என் அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். என் பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தப் பாடல்கள் மூலமாக கிடைத்த வருவாய் தொடர்பாகவும் தெரிவிக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் இதை செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என அந்த நோட்டீஸில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார். குட் பேட் அக்லி திரைப்படம் ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் 101.30 கோடி வசூல் செய்துள்ள நிலையில் தற்போது இந்த புதிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.