Connect with us

ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் வைத்து பாடிக் காட்டிய இளையராஜா… அப்பல்லாம் வொர்க் அவுட் ஆகல- ஆனா மேசையில தாளம்போட்டு கிடைத்த ஆன வாய்ப்பு!

CINEMA

ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் வைத்து பாடிக் காட்டிய இளையராஜா… அப்பல்லாம் வொர்க் அவுட் ஆகல- ஆனா மேசையில தாளம்போட்டு கிடைத்த ஆன வாய்ப்பு!

 

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார். அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது.

#image_title

இந்நிலையில் தனக்கு முதல் பட சான்ஸ் கிடைத்தது எப்படி என்பது பற்றி ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா பேசியுள்ளார். அத்ல் “எனக்காக என் அண்ணன் பாஸ்கர்தான் பல கம்பெனிகளுக்கு சென்று வாய்ப்பு கேட்பார். அப்போது எஸ் பி முத்துராமன், தேவராஜ் மோகன் போன்ற பல முன்னணி இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டுள்ளோம். அவர்களுக்காக ஒரு ஆர்க்கெஸ்ட்ரா போல இசைக் கலைஞர்களை வைத்து வாசித்தெல்லாம் காட்டியுள்ளோம்.

ஆனால் அவர்களால் எல்லாம் என் இசையைக் கணிக்க முடியவில்லை. பஞ்சு அருணாசலம் அண்ணனிடம் சென்ற போது, அவர் எதாவது ட்யூன் இருந்தா பாடிக் காட்டு என்றார். அப்போது நான் மேஜையில் தாளம் போட்டு அவருக்கு சில பாடல்களை பாடியும், ஹம்மிங் செய்தும் காட்டினேன். அவர் அதைக் கேட்டுவிட்டு ‘நல்லா இருக்கேய்யா’. நாம ஒரு படம் பண்ணுவோம் என்றார். அப்படிதான் எனக்கு அன்னக்கிளி சான்ஸ் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.

Continue Reading
To Top