இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்த உள்ளார். அதற்கான ஒத்திகை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இதையடுத்து பல இணையச் சேனல்களில் இளையராஜா நேர்காணல்கள் கொடுத்து வருகிறார்.
அப்படி ஒரு நேர்காணலில் தன்னுடன் பணியாற்றிவிட்டு இப்போது இந்த உலகில் இல்லாதவர்கள் பற்றிய நினைவுகள் குறித்து கேட்டபோது “என்னுடன் இல்லாதவர்கள் பற்றி எப்போதாவது ஞாபகம் வருமா என்றால், வரும்தான்… நானும் மனிதன்தானே. இசைத்துறையில் என்று எடுத்துக்கொண்டால் இவன் ஞாபகம் அடிக்கடி… SPB அடிக்கடி என் நினைவுகளில் வருவான். ஆனால் நம்மை விட்டு சென்றவர்களின் பிரிவை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதுதானே இயற்கை.” எனக் கூறியுள்ளார்.
எஸ் பி பி மறைவதற்கு சில ஆண்டுகள் முன்னால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்திருந்தனர். இளையராஜாவின் பாடல்களை எஸ் பிபி அனுமதி இல்லாமல் கச்சேரிகளில் பாடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அது சம்மந்தமாக இருவருக்கும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்தன.
ஆனால் அதன் பிறகு இருவரும் சமாதானம் ஆகி இளையராஜா இசையில் எஸ் பி பி ஒரு பாடலைப் பாடினார். அந்த சந்திப்பில் இருவரும் மிகவும் நெகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…