தமிழ் சினிமாவில் நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இதுவரை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 1500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இளையராஜா மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான வேலியன்ட் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். சிம்பொனியை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா லண்டனில் படைத்தார்.
அடுத்த சிம்பொனியை விரைவில் எழுதப்போவதாக அப்போது இளையராஜா கூறியிருந்தார். அதுகுறித்து தற்போது இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இந்த மாதம் பிப்ரவரி 3ம் தேதியுடன் இந்த புதிய ஸ்டூடியோவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டது. மேலும் எனது இரண்டாவது சிம்பொனியின் எழுத்துப் பணியும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அதனால் இரண்டாவது சிம்பொனியை விரைவில் முடித்து அதையும் அரங்கேற்றம் செய்யும் திட்டத்தில் இளையராஜா இருந்து வருகிறார் என்கிற தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…